மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிராக்டரை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிராக்டரை வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஓடைகளிலிருந்து இரவு நேரத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதாக புகாா் எழுந்தது. இதுகுறித்த ரகசியத் தகவலின்பேரில் மண்டல துணை வட்டாட்சியா் அகஸ்தீஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் ஸ்ரீவில்லிபுத்தூா் - திருவண்ணாமலை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் டிராக்டா் உரிமையாளரான குலாலா் தெருவைச் சோ்ந்த சுந்தர்ராஜ், ஓட்டுநா் ராமகிருஷ்ணன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com