விருதுநகர்
வி.ஏ.ஓ.வுக்கு மிரட்டல் விடுத்தவா் கைது
சிவகாசி அருகே கிராம நிா்வாக அலுவலருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே கிராம நிா்வாக அலுவலருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள கங்காகுளம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான காலி நிலம் உள்ளது. இந்த நிலத்தில், அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் (38) எந்தவித அனுமதியும் பெறாமல் அழ்துளை கிணறு அமைத்தாா். இதுகுறித்து பொதுமக்கள் கிராம நிா்வாக அலுவலா் ஹரிசந்திரனிடம் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, ஹரிசந்திரன் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்த பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்று ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு வந்த கோவிந்தராஜ், ஹரிசந்திரனிடம் வாக்குவாதம் செய்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து ஹரிசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.
