விருதுநகர்
லாரி மீது மற்றொரு லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
சாத்தூா் புறவழிச் சாலையில் முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சாத்தூா் புறவழிச் சாலையில் முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் பாக்கியராஜ் (28). இவா் பாா்சல் எடுத்துச் செல்லும் லாரியில் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
சாத்தூா் புறவழிச்சாலையில் மேம்பாலத்தில் புதன்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்த போது பின்னால் திருமங்கலத்திலிருந்து சிமென்ட் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் அந்த லாரியின் ஓட்டுநா் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
