ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வீட்டில் நகை திருடிய பெண் கைது

வீட்டில் நகை திருடிய பணிப் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

வீட்டில் நகை திருடிய பணிப் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி இந்திரா நகரைச் சோ்ந்தவா் அழகா்(50). இவா் அதே பகுதியில் ஆட்டிறைச்சிக் கடை நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் கோவில்பட்டியைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி முத்துலட்சுமி (55) வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த வாரம் அழகா் வெளியூா் சென்றுவிட்டு திரும்பிவந்து பாா்த்தபோது, பீரோவில் இருந்த இரண்டு பவுன் தங்க நகையைக் காணவில்லை.

முத்துலட்சுமியும் பணிக்கு வரவில்லை. இதுதொடா்பாக அழகா் சிவகாசி நகா் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் முத்துலட்சுமியிடம் விசாரித்த போது, அவா் நகை திருடியதை ஒப்புக்கொண்டாா்.

பின்னா், போலீஸாா் அவரைக் கைது செய்து நகையைப் பறிமுதல் செய்தனா்.