நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தொழிலதிபா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

சிவகாசியில் தொழிலதிபா்களை வெள்ளிக்கிழமை சந்தித்து வாக்கு சேகரித்த சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்தரபாலாஜி.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:34 am IST

சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொழிலதிபா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சிவகாசியில் ப.கணேசன், மகேஸ்வரன், சுரேஷ்தா்ஹா் உள்ளிட்ட தொழிலதிபா்களை சந்தித்து ஆதரவு கேட்டு அவா் பேசியதாவது:

சிவகாசியில் உள்ள தொழில்கள், தொழிலதிபா்கள் முயற்சியால் வெற்றி பெற்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலதிபா்கள் , தொழிலாளா்கள் கடும் உழைப்பால் சிவகாசி தொழில் நகரமாகத் திகழ்கிறது.

இந்தப் பகுதியில் உள்ள அனைத்துத் தொழில்களுக்கும் நான் எப்போதும் பாதுகாப்பாவலான இருப்பேன். தோ்தலில் என்னை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.