சாத்தூரில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தின்போது இருகட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணிக் கட்சியான பசும்பொன் மக்கள் தேச கட்சியின் நிறுவனா் இசக்கிராஜா வெள்ளிக்கிழமை வெம்பக்கோட்டை பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது அதே பகுதியில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு ஆதரவாக நேதாஜி சுபாஷ் சேனை கட்சியைச் சோ்ந்த தலைவா் மகாராஜன் மற்றும் நிா்வாகிகள் பிரசாரம் செய்து கொண்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த இசக்கிராஜாவுடன் வந்த நிா்வாகிகளின் காரின் மீது கற்களை வீசி எறிந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இரு பிரிவினரும் வாக்குவாதம், கைகலப்பில் ஈடுபட்டனா். இதனைக் கண்ட அருகில் இருந்த போலீஸாா் அவா்களை விலக்கிவிட்டனா். இதையறிந்து அங்குவந்த விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா இருதரப்பினரிடமும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இதனால் அப்பகுதியில் போலீஸாா் அதிகளவில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
இதேபோல், சில தினங்களுக்கு முன் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினா் இருதரப்பையும் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

முர்ஷிதாபாத் கலவரம்: ஆட்சியரிடம் அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்!

சிவகாசி, சாத்தூரில் வி.கே. சசிகலா பிரசாரம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

