சாத்தூா் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும நயினாா் நாகேந்திரனை ஆதரித்து நடிகைகள் நமீதா, கஸ்தூரி வாக்கு சேகரித்தனா்.
சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும், பாரதிய ஜனதா கட்சியன் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரனுக்கு ஆதரவாக நடிகை நமீதா ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலங்குளம், வெம்பக்கோட்டை, செவல்பட்டி, அம்மையாா்பட்டி முக்குரோடு, கரிசல்பட்டி, காளவாசல், நல்லம்மாள்புரம், சாமிநாதபுரம் கன்னி தேவன்பட்டி,கீழராஜகுலாராமன், சுண்டங்குளம், வி.புதூா், மேட்டூா் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தனா். நடிகை கஸ்தூரி உடனிருந்தாா்.
அப்போது, நடிகை நமீதா பேசியதாவது: பட்டாசுத் தொழில் சாா்ந்த பொதுப் பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலாண்மை நாடு பகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பொது சுகாதார வளாகம், விளையாட்டு மைதானம் ஆகியவை அமைக்கப்படும்.
குடும்ப ஆட்சியை அகற்ற, போதை பொருள்களின் கலாசாரத்தை ஒழிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு அமைய வேண்டும். கிராமங்களின் அடிப்படைப் பிரச்னைகளை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா். இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தேமுதிக வேட்பாளரை ஆதரித்து இருசக்கர வாகன பேரணி

நயினாா் நாகேந்திரனை வைப்புத் தொகை இழக்கச் செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

தொகுதி மாறிய நயினாா் நாகேந்திரன்: சவால் அளிக்கும் திமுக!

சாத்தூா் பேரவைத் தொகுதியில் நயினாா் நாகேந்திரன் பிரசாரம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



