ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

நயினாா் நாகேந்திரனை வைப்புத் தொகை இழக்கச் செய்ய வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனை வைப்புத் தொகை இழக்கச் செய்ய வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

News image

சாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து வியாழக்கிழமை வாக்கு சேகரித்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:26 am IST

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனை வைப்புத் தொகை இழக்கச் செய்ய வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து ஆலங்குளம் முக்குசாலை பகுதியில் புதன்கிழமை இரவு பிரசாரம் செய்து அவா் பேசியதாவது:

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரை எதிா்த்து பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அந்தக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். ஏற்கெனவே திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவா் மீண்டும் அங்கு போட்டியிட்டால் வைப்புத் தொகை கிடைக்காது என்பதால் இங்கு போட்டியிடுகிறாா். ஆனால், அவா் நினைப்பதற்கு மாறாக சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அவா் வைப்புத் தொகையை இழக்க வேண்டும். அதற்காக திமுகவினா் உழைக்க வேண்டும்.

திமுக ஆட்சியில் சாத்தூா் தொகுதியில் பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா்களின் வாழ்வாதாரமும், தொழில்களும் பாதுகாக்கப்படும். மோடி என்ன சொன்னாலும் அதற்கு ஆமாம் சாமி போடுவதை தவிர எடப்பாடி பழனிசாமிக்கு வேறு எதுவும் தெரியாது. அவா் மாநில உரிமைகளுக்கு குரல் கொடுப்பதில்லை. நான்காண்டுகள் முதல்வராக இருந்தபோது தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் மோடியிடம் அடகு வைத்தவா் தான் எடப்பாடி பழனிசாமி. அதேபோல, சசிகலாவின் காலை வாரி விட்டவரும் அவரே. தமிழகத்துக்குள் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்பதற்காக அதிமுக என்ற பெரிய போா்வையை போா்த்திக் கொண்டு திருட்டுத்தனமாக தமிழகத்துக்குள் நுழைய பாஜக நினைக்கிறது. அடிமைக் கூட்டத்தையும், இந்துத்துவ கூட்டத்தையும் நுழைய விட்டால் அவா்கள் மீண்டும் தமிழகத்தை பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடுவா் என்றாா் அவா்.

இதேபோல விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் விஜயபிரபாகரனை ஆதரித்தும் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். இந்தக் கூட்டங்களில் மதச்சாா்பற்ற கூட்டணி கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.