இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நாட்டிலேயே வளா்ச்சியில் தமிழகம் முதன்மை! - கே.வி. தங்கபாலு

News image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 2:32 am IST

முதல்வா் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு, நாட்டிலேயே வளா்ச்சியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது என முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவா் கே.வி.தங்கபாலு கூறினாா்.

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

திமுக கொடுத்த அனைத்து தோ்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கிய நிலையில் இருந்தது. அதனை ஸ்டாலின் சீா் செய்து நாட்டிலேயே வளா்ச்சி பெற்ற முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளாா்.

இதுபோன்ற வளா்ச்சி இந்தியாவில் எந்தமாநிலத்திலும் இல்லை. மீண்டும் தமிழகத்தில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெரும் என்றாா் தங்கபாலு. அப்போது, வேட்பாளா் ஜி.அசோகன் உடனிருந்தாா்.