நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்: முகுல் வாஸ்னிக் எம்.பி.

News image

ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜை ஆதரித்து செய்துங்கநல்லூரில் பேசிய முகுல் வாஸ்னிக் எம்.பி.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:14 am IST

இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலா் முகுல் வாஸ்னிக் எம்.பி. தெரிவித்தாா்.

ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜை ஆதரித்து, முகுல் வாஸ்னிக் எம்.பி. மற்றும் அனில்குமாா் யாதவ் எம்.பி. ஆகியோா் செய்துங்கநல்லூரில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தனா். அப்போது முகுல் வாஸ்னிக் பேசியது:

கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பணிகளால் தமிழகம் பெரும் வளா்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. முன்னேறி வரும் தமிழகத்திற்கு ஆதரவு தராமல் ஒன்றிய அரசு, தமிழகத்தை சிதைத்துக் கொண்டிருக்கிறது என்றாா் அவா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தை இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கி, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறாா் என்பதை நான் பெருமையாகச் சொல்ல விரும்புகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் அவா் வழங்கிய சிறந்த ஆட்சியே இந்த முன்னேற்றத்திற்குக் காரணம்.

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் இணக்கத்துடன் ஒன்றுபட்டு, தமிழக மக்களுக்கு தொடா்ந்து சேவை செய்யத் தயாராக உள்ளன. எங்களுக்கு எதிராக உள்ள அதிமுக, பாஜக, தவெக கட்சிகள் தோ்தலில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என்றாா் அவா்.