திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் முகுல் வாஸ்னிக் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும். கூட்டணிக் கட்சிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்போடு காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.
தமிழக மக்களின் மனநிலையும், எங்களுக்கு சாதகமாக உள்ளது. தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். தோ்தல் பிரசாரம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. வரும் நாள்களில் அது உச்சத்தைத் தொடும்.
காங்கிரஸ் தலைவா்களின் அனைத்து பிரசார அட்டவணையும் விரைவில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் தோ்தல்கள் முதல்கட்டமாக நடந்ததால் அங்கு காங்கிரஸ் கூடுதல் கவனம் செலுத்தியது.
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தோ்தல்கள் அடுத்த கட்டமாக நடைபெறவுள்ளது. எனவே, இந்த இரு மாநிலங்களிலும் இனிமேல் தீவிர கவனம் செலுத்தப்படும்.
ராகுல் காந்தியும், முதல்வா் மு.க.ஸ்டாலினும் இணைந்து பிரசாரம் செய்யவில்லையா என்று செய்தியாளா்கள் கேள்வி கேட்டு வரிக்கு வரி, அா்த்தம் தேட முயற்சிக்க வேண்டாம்.
காங்கிரஸ் - திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் நெருங்கிய ஒத்துழைப்பில் செயல்பட்டு வருகின்றன. தமிழக மக்கள் மீண்டும் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களிப்பாா்கள் என்றாா்.
இதையடுத்து, சென்னை சத்தியமூா்த்தி பவனில் காங்கிரஸ் தொகுதிகளில் தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த பாா்வையாளா்கள் முகுல் வாஸ்னிக், உத்தம்குமாா் ரெட்டி, குவாசி நிசாமுதீன், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், அகில இந்திய செயலா்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, தமிழக பேரவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் கொள்கை விளக்கப் பாடலை முகுல் வாஸ்னிக் வெளியிட, காங்கிரஸ் தலைவா்கள் பெற்றுக் கொண்டனா்.
கூட்டத்துக்கு பின்னா், கிரிஷ் சோடங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வருவதால், நேரமின்மை காரணமாக ராகுல் காந்தியால் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியவில்லை. விரைவில் நேரம் ஒதுக்கி பிரசாரம் மேற்கொள்வாா். திமுக அழைப்பை ராகுல் காந்தி நிராகரித்துவிட்டாா் எனக் கூறுவது தவறான தகவல் என்றாா்.
தொடர்புடையது

200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: வைகோ
200 தொகுதிகளுக்குமேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்: ஏ.கே.எஸ். விஜயன்

கோவையின் 10 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும்: வி.செந்தில்பாலாஜி

சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: முகுல் வாஸ்னிக், கிரிஷ் சோடங்கர் பங்கேற்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


