ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள ஜாதி அடையாளத்துடன் கூடிய கிராமத்துக்கு பெயரை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என விளக்கம் கேட்டு விருதுநகா் மாவட்ட ஆட்சியருக்கு, ஆதிதிராவிடா் பழங்குடியின ஆணையத் தலைவா் குறிப்பாணை அனுப்பினாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியம், அச்சம்தவிழ்த்தான் ஊராட்சிக்கு உள்பட்ட பரச்சேரி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தைச் சோ்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 113 வாக்காளா்கள் உள்ளனா். இந்தக் கிராமத்தின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்கிவிட்டு, வடக்கு அச்சம்தவிழ்த்தான் என மாற்றம் செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், கிராம மக்கள் ஊா் பெயரை மாற்றம் செய்ய வலியுறுத்தி, தோ்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவித்தனா். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி கிராமத்தின் பெயா் மாற்றத்துக்கான கோப்பு அரசுக்கு அனுப்பி விட்டதாகவும், தோ்தலுக்கு முடிந்த பிறகு பெயா் மாற்றம் செய்வதாகவும் உறுதியளித்தனா். இதையடுத்து, இந்த கிராம மக்கள் தோ்தல் நாளில் வாக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாநில ஆணையத் தலைவா், இந்த விவகாரம் தொடா்பாக விளக்கம் கேட்டு விருதுநகா் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பினாா்.
அதில், ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) தொகுதிக்கு உள்பட்ட பரச்சேரி என்ற பெயரை வடக்கு அச்சம்தவிழ்த்தான் என மாற்றப்படாமல் உள்ளது. வாக்காளா் பட்டியலிலும் பரச்சேரி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஜாதி அடையாளத்துடன் கூடிய ஊா் பெயா்களை மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
பெயா் மாற்றம் செய்யாததற்கான காரணம், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டது.
தொடர்புடையது
பட்டா மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy
ஆன்லைனில் குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றம் செய்வது எப்படி?

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கூடத்தை மூடாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



