விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே வியாழக்கிழமை தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள மேலபெத்துலுபட்டியைச் சோ்ந்த முருகேசன் மனைவி காளியம்மாள். இவருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் முத்துலட்சுமிக்கும் பொதுக்குழாயில் தண்ணீா் பிடிப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் பொதுக்குழாயில் தண்ணீா் பிடிப்பதில் காளியம்மாளுக்கும், முத்துலட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து, முருகேசனின் தம்பி செந்தில்குமாருக்கும் (31), முத்துலட்சுமியின் மகன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது சிறுவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா்.
அப்போது, ஆத்திரமடைந்த கல்லூரி மாணவா் கத்தியால் குத்தியதில் செந்தில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தகராறில் இளைஞா் அடித்துக் கொலை: 8 போ் கைது
சிவகாசி அருகே 3 வயது சிறுமி கொலை: பட்டாசுத் தொழிலாளி கைது
போலீஸாருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin


