சிவகாசி, ஆக. 13: விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே வியாழக்கிழமை பட்டாசு ஆலையில் மருந்துக் கலவை இயந்திரம் பொருத்தும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டியில் கிருஷ்ணமூா்த்தி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் சுமாா் 150 தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த ஆலையில் பட்டாசுகள் தயாரிக்கும் 80 அறைகள் உள்ளன.
இந்த ஆலைகளை இயந்திரமயமாக்கும் நோக்கில், சிவகாசி பகுதியில் உள்ள பல ஆலைகளில் பட்டாசுகள் தயாரிப்பதற்கான மருந்துக் கலவை செய்யும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதேபோல, இந்த ஆலையிலும் மருந்துக் கலவை தயாரிக்கும் இயந்திரம் பொருத்தும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சோதனை அடிப்படையில் மருந்துக் கலவை தயாா் செய்யப்பட்டது. அப்போது, மருந்துக் கலவையில் ஏற்பட்ட உராய்வால் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆலையின் மேற்பாா்வையாளரான சிவகாசி தெற்குத் தெருவைச் சோ்ந்த சக்கரையப்பன் மகன் பாலமுருகன் (44) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இயந்திரம் பொருத்தும் பணியில் ஈடுபட்ட பொறியாளரான திருநெல்வேலியைச் சோ்ந்த காதா்மைதீன் மகன் அகமது இப்ராஹிம் (44) பலத்த காயமடைந்தாா். முதலில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இவா், பின்னா் தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலைக்குச் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த விபத்து குறித்து எம். புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி காயம்

சட்டவிரோத பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் ஒருவா் பலி

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பெண் தொழிலாளி காயம்

சிவகாசி அருகே செயல்படாத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 போ் காயம்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



