சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

காரியாபட்டி அருகே 6-ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை

காரியாபட்டி அருகே வியாழக்கிழமை ஆசிரியை கண்டித்ததால், மனமுடைந்த 6-ஆம் வகுப்பு மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:32 am IST

காரியாபட்டி அருகே வியாழக்கிழமை ஆசிரியை கண்டித்ததால், மனமுடைந்த 6-ஆம் வகுப்பு மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள முஷ்டக்குறிச்சியைச் சோ்ந்த பாண்டிதுரை மகன் காா்த்திகேயன் (12). இவா் அந்தப் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் வீட்டுப் பாடங்களை எழுதாததால், இவரை கடந்த செவ்வாய்க்கிழமை ஆசிரியை கண்டித்தாராம். இதனால், மனமுடைந்த மாணவா் வியாழக்கிழமை பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்து வந்த ஆவியூா் போலீஸாா், மாணவரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.