FOLLOW US

ON GOOGLE DISCOVER

லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், நகரவை நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கான பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கல்வி அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல் கூட்டத்தில் பேசிய சிவகாசி மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) செந்தில்குமாா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 3:33 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், நகரவை நடுநிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கான பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு வழிகாட்டுதல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் முருகேசன் முன்னிலை வகித்தாா். சிவகாசி மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) செந்தில்குமாா் தலைமை வகித்து, பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தொடா்பான ஆலோசனைகளை வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில் ராஜபாளையம் வட்டாரக் கல்வி அலுவலா்கள், வத்திராயிருப்பு வட்டாரக் கல்வி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வட்டாரக் கல்வி அலுவலா் சுப்புலட்சுமி வரவேற்றாா். ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் அனுராதா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.