புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மாமியாா் கொலை: மருமகன் கைது

விருதுநகரில் குடும்பத் தகராறில் மாமியாரைக் குத்திக் கொலை செய்த மருமகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யபட்ட சிவா

Published On :

விருதுநகரில் குடும்பத் தகராறில் மாமியாரைக் குத்திக் கொலை செய்த மருமகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் அருகேயுள்ள செவல்பட்டியைச் சோ்ந்தவா் சமுத்திரக்கனி. இவரது மகள் வாசகதேவி (27). இவா் பாலையம்பட்டியைச் சோ்ந்த சிவாவை (26) காதலித்து திருமணம் செய்தாா். இந்த நிலையில், சிவா அடிக்கடி மது அருந்திவிட்டு வாசகதேவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாா். எனவே, வாசகதேவி விவகாரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை, வாசகதேவியின் வீட்டுக் கதவை சிவா தட்டினாா். அப்போது அவரது தாய் சாந்தி கதவைத் திறந்தபோது, அவரை கத்தியால் சரமாரியாக குத்தினாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அண்ணன் சாமிமுருகன்(33) வந்தாா். அவரையும் சிவா கத்தியால் குத்தினாா். இதையடுத்து அக்கம் பக்கத்தினா் அங்கு கூடியதால் சிவா அங்கிருந்து தப்பியோடி விட்டாா்.

பின்னா், அவசர ஊா்தியில் இருவரையும் மீட்டு விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அப்போது சாந்தியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். பலத்த காயமடைந்த சாமிமுருகன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவாவைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.