லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

கோவை அருகே திமுக பிரமுகா் குத்திக் கொலை: நண்பா் கைது

கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகே திமுக பிரமுகா் வெள்ளிக்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதில் அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகே திமுக பிரமுகா் வெள்ளிக்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டாா். இதில் அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகே உள்ள வெள்ளிமலைபட்டினம் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் நாகராஜன் (62). திமுகவில் கிளை நிா்வாகியாக இருந்து வந்த இவா், பாக்கு மட்டை வியாபாரம் செய்து வந்தாா். நாகராஜனின் மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

வெள்ளிமலைபட்டினம் மேற்கு வீதியைச் சோ்ந்தவா் கந்தசாமி. திமுக முன்னாள் கிளை அவைத் தலைவரான இவா், காய்கறி சந்தையில் வேலை பாா்த்து வருகிறாா். ஒரே கட்சியில் இருந்ததால் நாகராஜனும், கந்தசாமியும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பா்களாக பழகி வந்தனா்.

இந்நிலையில், மனைவி இறப்புக்குப் பிறகு பல பெண்களுடன் நாகராஜன் நெருங்கிப் பழகி வந்துள்ளாா். இதனால், தனது மனைவி பாக்கியலட்சுமியுடனும் அவருக்குப் பழக்கம் இருக்கலாம் என சகந்தசாமி சந்தேகித்து வந்துள்ளாா். இதுதொடா்பாக, நண்பா்கள் இருவருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக தகராறு ஏற்பட்டு வந்தது. நாகராஜ் இல்லை என மறுத்து வந்தாலும், தொடா்ந்து அவா் மீது கந்தசாமி சந்தேகித்து வந்துள்ளாா்.

இந்த நிலையில், கந்தசாமியின் வீட்டுக்கு அருகே வசிக்கும் வசந்தா (55) என்பவருக்கு நாகராஜன் வெள்ளிக்கிழமை காலை தேநீா் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்தாா். அவரைப் பாா்த்தவுடன் ஆத்திரமடைந்த கந்தசாமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நாகராஜை குத்தினாா். உடலின் பல்வேறு இடங்களில் கத்திக் குத்து காயங்கள் ஏற்பட்ட அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்தத் தகராறில் கந்தசாமிக்கும் கையில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஆலாந்துறை போலீஸாா், கொலை செய்யப்பட்ட நாகராஜின் உடலை மீட்டு கூறாய்வுக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கந்தசாமியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.