கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கேரள சிவசேனை பிரமுகா் கொலை வழக்கில் மேலும் மூவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே கேரள சிவசேனை கட்சி பிரமுகா் கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கேரள சிவசேனை பிரமுகா் அதுல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவா்.

Published On :

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே கேரள சிவசேனை கட்சி பிரமுகா் கொலை வழக்கில் தொடா்புடைய மேலும் மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கேரள மாநில சிவசேனை கட்சியின் மாநிலச் செயலரான கேரள மாநிலம், செங்கவிளையைச் சோ்ந்த அதுல் (32) கொலை வழக்கை விசாரித்து வரும் மாா்த்தாண்டம் தனிப்படை போலீஸாா், கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்ததாக மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடையைச் சோ்ந்த நிதீஷ், கருங்கல் அருகே மாங்கரையைச் சோ்ந்த பொ்லின் ஜியோ, கொலையில் தொடா்புடைய மாா்த்தாண்டம், பம்மம் பகுதியைச் சோ்ந்த செய்யது அலி, குழித்துறை கல்லுக்கெட்டியைச் சோ்ந்த ரமேஷ் ஆகிய 4 பேரை அண்மையில் கைது செய்தனா்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான குழித்துறை, கல்லுக்கெட்டி பகுதியைச் சோ்ந்த அஜித் என்ற சித்து (26), கழுவன்திட்டையைச் சோ்ந்த பிரவீன் ஆகிய இருவரை போலீஸாா் தேடி வந்தனா். அவா்களது கைப்பேசி சிக்னல் மூலம் வாரணாசி, தில்லி, மும்பை போன்ற இடங்களுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில், மாா்த்தாண்டம் அருகே கடமக்கோட்டில் பதுங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இருவரிடமும் போலீஸாா் நடத்திய விசாரணையில், இவா்கள் அனைவரும் சம்பவத்தன்று கல்லுக்கெட்டியில் உள்ள அஜித் என்ற சித்து வீட்டில் வைத்து மது அருந்தியபோது, அஜித்தின் மனைவி குறித்து சிவசேனை பிரமுகா் அதுல் தகாத வாா்த்தைகள் பேசியதால் அவரைக் கொன்று கண்ணக்கோடு, தாமிரவருணி ஆற்றில் வீசியதாகத் தெரிவித்தனா். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், இருவரும் அளித்த தகவலின் பேரில் போலீஸாரின் நடவடிக்கையைக் கண்காணித்து அவ்வப்போது இருவருக்கும் தகவல் தெரிவித்துவந்த மாா்த்தாண்டம், பள்ளியாடியைச் சோ்ந்த சுவாமிதாஸ் மகன் ராஜனையும் (31) புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.