கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

ராஜபாளையம் அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சிவலிங்காபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனையிட்டனா். அங்கு ஆலங்குளத்தைச் சோ்ந்த பக்கீா் (45) சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 105 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.