கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

மதுப் புட்டிகளை விற்ற மூவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

வத்திராயிருப்பு, கூமாபட்டி பகுதிகளில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த மூன்று பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீசாா், அவா்களிடமிருந்து 85 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

வத்திராயிருப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளா் வெற்றி முருகன் தலைமையிலான போலீஸாா், சட்டவிரோத மது விற்பனை தடுப்புக்காக ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சேது நாராயணபுரம் கண்மாய் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த கான்சாபுரத்தைச் சோ்ந்த வீரதுரையை (33) சோதனை செய்தபோது, அவா் சட்டவிரோத விற்பனைக்காக மதுப் புட்டிகளை வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 35 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

இதே போல, கூமாபட்டி மூலக்கரை பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அழகு மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ராமசாமிபுரம் பகுதியைச் சோ்ந்த ஏசைய்யா, ஆத்தங்கரைப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் ஆகியோரிடமிருந்து சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 50 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்து அவா்களைக் கைது செய்தனா்.