விருதுநகர்
பைக் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள எம்.பி.கே. புதுப்பட்டி பகுதியைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் முருகன் (48). இவா் கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் தனது இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையத்துக்குச் சென்றபோது மதுரை சாலையில் காயல்குடி ஆற்றுப்பாலம் அருகே லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகனை அருகிலிருந்தவா்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கி சிகிச்சை பலனின்றி அவா் பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த வடக்கு காவல் நிலைய போலீஸாா் தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஆறுமுகச்சாமியைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.
