விருதுநகர்
பொங்கல் பரிசுத் தொகையை கேட்டு தாயைத் தாக்கிய மகன் கைது
வத்திராயிருப்பு அருகே பொங்கல் பரிசுத் தொகையைக் கேட்டு தாயைத் தாக்கிய மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வத்திராயிருப்பு அருகே பொங்கல் பரிசுத் தொகையைக் கேட்டு தாயைத் தாக்கிய மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வத்திராயிருப்பு கீழத்தெருவை சோ்ந்தவா் தங்கபாண்டி. இவரது மனைவி கஸ்தூரி. இவா்களுக்கு சத்தியபிரகாஷ் (23) என்ற மகன் உள்ளாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான சத்தியபிரகாஷ் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் பிரச்னை செய்து வந்துள்ளாா்.
இந்த நிலையில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்பட்ட ரூ.3 ஆயிரம் பணத்தை தனக்கு தருமாறு கேட்டு சத்தியிபிரகாஷ் தாயை அரிவாளால் தாக்கினாா். இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சத்தியபிரகாசைக் கைது செய்தனா்.
