வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

Published on

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்துப் புகுந்து 8 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ராஜபாளையம் செண்பகத்தோப்பு சாலைராம்நகரைச் சோ்ந்த பொன்னையா மகன் இமானுவேல் (61). இவா் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மகன்கள் இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், தென்காசியில் உள்ள இளைய மகன் வீட்டுக்கு கணவா், மனைவி இருவரும் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com