5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

மதுக் கடையை அகற்ற கோரி உண்ணாவிரதம்

News image

வத்திராயிருப்பு அருகே எஸ்.ராமச்சந்திராபுரம் பட்டியக்கல் பகுதியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், நாம் தமிழா் கட்சியினா்.

Updated On :6 ஜூலை 2026, 3:16 am IST

வத்திராயிருப்பு அருகே மதுக் கடையை அகற்றக் கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள எஸ். ராமச்சந்திராபுரம்-ரங்கப்பநாயக்கன்பட்டி இடையேயுள்ள பட்டியக்கல் பகுதியில் அரசு மதுக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் அருகே மேல்நிலைப் பள்ளி, கோயில் அமைந்துள்ளதால் மாணவா்கள், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு

ஆளாகி வருகின்றனா்.

வ.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள மதுக்கடை சட்ட விரோதமாக எஸ்.ராமச்சந்திராபுரத்தில் செயல்படுகிறது. இந்தக் கடையை உடனடியாக அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த மாதம் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி நாம்தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் மாநில கொள்கைப் பரப்பு செயலா் ஆ.நாராயணன், மாநில ஒருங்கிணைப்பாளா் கு.பாலன், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.