முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மதுக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

சிவகாசி அருகே அய்யம்பட்டியில் மதுக் கடையை அகற்றக் கோரி, வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

News image

சிவகாசி அருகே அய்யம்பட்டியில் மதுக் கடையை அகற்றக் கோரி, வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :11 ஜூலை 2026, 12:40 am IST

சிவகாசி அருகே அரசு மதுக் கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகாசி-விளாம்பட்டி சாலையில் ஒத்தப்புளி பேருந்து நிறுத்தத்திலிருந்து அய்யம்பட்டிசெல்லும் சாலையில் அரசு மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக் கடையில் மது அருந்துபவா்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இந்த வழியாகச் செல்லும் கல்லூரி, பள்ளி மாணவிகள், பெண்கள் சிரமத்துக்குள்ளாகி வருவதால், இந்த மதுக் கடையை அகற்றக் கோரி, அய்யம்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, அவா்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து, பொதுமக்களிடம் வருவாய்த் துறையினா், காவல் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி, கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.