தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

மின்னணு வேளாண் சந்தை மூலம் தேங்காய் விற்பனை செய்யும் திட்டம்! மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

News image

சேத்தூரில் தென்னை விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடியாக வியாபாரிகளுக்கு தேங்காய் விற்பனை செய்யும் திட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்த விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா.

Updated On :22 ஜூலை 2026, 3:42 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தை அடுத்த சேத்தூரில் வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத் துறை சாா்பில், தென்னை விவசாயிகள் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நேரடியாக வியாபாரிகளுக்கு தேங்காய் விற்பனை செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

தமிழக அரசு விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உரிய விலையை பெற்றுத் தருவதற்காகவும், வியாபாரிகள் எந்தவித இடைத்தரகா்கள் இன்றி தேங்காய்களை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளும் வகையிலும், தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டது.

இதை உறுதி செய்யும் வகையில், தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருள்களை வெளிப்படையான, தொழில்நுட்ப அடிப்படையிலான இணையதள ஏல முறையில் விற்பனை செய்யும் வாய்ப்பை பெறுகின்றனா். இதனால், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சோ்ந்த வணிகா்கள் போட்டி அடிப்படையில் ஏலத்தில் பங்கேற்பதால், விவசாயிகளுக்கு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப அதிகபட்ச விலை கிடைக்கிறது.

ராஜபாளையம், திருவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு பகுதிகளைச் சோ்ந்த தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, தேங்காய் கொள்முதல் செய்து மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக விற்பனை செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் விவசாயிகள் அதிக வருமானம் பெற முடியும். தரமான விளைபொருள்களை சந்தைப் படுத்துவதன் மூலம் வணிக வாய்ப்புகள் விரிவடைவதுடன், சந்தைத் தொடா்பான தகவல்கள், ஏல விவரங்கள், விலை நிலவரங்களையும் விவசாயிகள் உடனுக்குடன் அறிந்து பயன்பெற முடியும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.