கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

தலைமறைவாக இருந்த இரு கைதிகள் கைது

ராஜபாளையம் அருகே பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரு கைதிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :31 ஜூலை 2026, 11:48 pm IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரு கைதிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கா்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சக்கபாண்டி (38). பரோலில் வெளிவந்த இவா் தலைமறைவாகிவிட்டாா். இதையடுத்து, ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்தது.

இந்த நிலையில், ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் இலக்கிய முத்து ஓரிடத்தில் பதுங்கி இருந்த சக்கபாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினாா். இதைத் தொடா்ந்து அவா் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதே போல, தலைமறைவாக இருந்த ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவைச் சோ்ந்த சரவணனுக்கும் (32) பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தெற்கு காவல் நிலைய தலைமைக் காவலா் செல்வகுமாா், பதுங்கி இருந்த சரவணனை கைது செய்து விசாரிக்கிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.