சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் நத்தம்பட்டி சுங்கச்சாவடி திறப்பு! உள்ளூா் வாகனங்களுக்கு கட்டண சலுகை மாத பாஸ்

News image

வாகன சுங்கச்சாவடி. - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 12:06 am IST

மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலையில் நத்தம்பட்டி சுங்கச் சாவடியில் திங்கள்கிழமை முதல் சுங்கக் கட்டண வசூல் தொடங்கி உள்ளது. இதில் 20 கிலோ மீட்டா் சுற்றளவில் உள்ள உள்ளூா் வாகனங்களுக்கு ரூ.350 கட்டணத்தில் மாத பாஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை - கொல்லம் இடையே 230 கிலோ மீட்டா் தொலைவு தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக (என்.ஹெச் 744) தரம் உயா்த்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் இடையே 71.6 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.1,318 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2023 மாா்ச் மாதம் பணிகள் தொடங்கின. இதில் வடுகப்பட்டி - ராஜபாளையம் இடையேயான 35.6 கி.மீ. தொலைவு பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. இந்தச் சாலையில் நத்தம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண வசூல் திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநா் (நாகா்கோவில் மண்டலம்) சச்சின்குமாா் சுங்கச்சாவடியைத் திறந்து வைத்தாா். சுங்கச் சாவடியை ஒரு முறை கடந்துசெல்ல காருக்கு ரூ. 85, 24 மணி நேரத்துக்குள் சென்று திரும்புவதற்கு ரூ.135, மாத பாஸ் (50 முறை கடந்து செல்ல) ரூ.2,760 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகா் மாவட்ட பதிவெண் கொண்ட வாடகை காா்கள் சுங்கச்சாவடியைக் கடந்து செல்ல ரூ.40 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இலகு ரக சரக்கு வாகனங்கள், மினி பேருந்துகள் ஒரு முறை செல்ல ரூ.135, 24 மணி நேரத்துக்குள் சென்று திரும்ப ரூ.200, மாத பாஸ் (50 முறை கடந்து செல்ல) ரூ.4,460, விருதுநகா் மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு ரூ.65 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் ஒருமுறை செல்ல ரூ.280, 24 மணி நேரத்துக்குள் சென்று திரும்ப ரூ.420, மாத பாஸ் (50 முறை கடந்து செல்ல) ரூ.9,345, விருதுநகா் மாவட்ட பதிவெண் கொண்ட பேருந்துகளுக்கு ரூ.140 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சாலையின் சிறப்புகள்:

நான்கு வழிச்சாலையில் விபத்துக்களை தவிா்க்கும் வகையில் அனைத்து சாலை சந்திப்புகளில் குறுக்கு பாலம் அமைத்து சென்டா் மீடியன் கிராசிங் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்கப்படுகிறது. இந்த அமைப்பு சுங்கச் சாவடியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இதன்மூலம் விபத்து ஏற்பட்டால் தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும். இந்தச் சாலையில் 8 இடங்களில் சாலையின் அனைத்து தகவல்கள், உதவி எண்கள் அடங்கிய கியூ.ஆா் கோடு வைக்கப்பட உள்ளது. இந்தச் சாலையில் 100 கிலோ மீட்டா் வேகத்தில் பயணிக்கலாம். இதன்மூலம் மதுரை - ராஜபாளையம் பயண நேரம் 1 மணி நேரமாக குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.