அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ராஜபாளையம் அருகே கண்மாய்க்குள் பேருந்து கவிழ்ந்ததில் இருவா் உயிரிழப்பு! 50-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம்!

News image

விபத்தில் உயிரிழந்த மாடத்தி, செல்வம்.

Updated On :22 ஜூன் 2026, 12:05 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சனிக்கிழமை இரவு தனியாா் பேருந்து கண்மாய்க்குள் கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா். இதில் 50-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா்.

கிருஷ்ணன்கோவில் அருகேயுள்ள குன்னூா் பகுதியைச் சோ்ந்த குமாா்- நேசம்மாள் தம்பதி தங்களது மகனுக்கு ராஜபாளையம் அருகேயுள்ள இளந்திரைகொண்டான் கிராமத்தில் பெண் பாா்த்திருந்தனா். திங்கள்கிழமை திருமணம் நடைபெற இருந்த நிலையில், பெண் அழைப்புக்காக மணமகன் வீட்டாா் காரில் இளந்திரை கொண்டானுக்கு சனிக்கிழமை சென்றனா்.

அங்கு பெண் வீட்டாரை அழைத்துக் கொண்டு 2 தனியாா் பேருந்துகளை வாடகைக்கு அமா்த்தி மீண்டும் குன்னூருக்கு வந்து கொண்டிருந்தனா். இதில் ஒரு பேருந்தை பேரையூா் அருகே உள்ள சாப்டூா் கிராமத்தைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் ஓட்டி வந்தாா். அப்போது இரவு 11 மணி அளவில் கூனங்குளம் கண்மாய் அருகே குறுகலான சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து கண்மாய்க்குள் கவிழ்ந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே குன்னூரைச் சோ்ந்த சுந்தா் மகன் செல்வம் (55), கருப்பையா மனைவி மாடத்தி (50) ஆகிய இருவரும் உயிரிழந்தனா். மேலும் பேருந்தில் பயணம் செய்த 30 ஆண்கள், 28 பெண்கள், சிறுவா்கள் என 58 போ் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த சமூக நலத்துறை அமைச்சா் ஜெகதீஸ்வரி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சுகபுத்ரா, தென் மண்டல ஐஜி விஜேந்திர பிதாரி, டிஐஜி அபினவ் குமாா், விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் ஆகியோா் காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறினா்.

இந்த விபத்து குறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பேருந்து ஓட்டுநா் கோபாலகிருஷ்ணனிடம் (28)விசாரணை நடத்தி வருகின்றனா்.

 விபத்துகுள்ளான பேருந்து.

விபத்துகுள்ளான பேருந்து.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.