சாத்தூா் அருகே சனிக்கிழமை கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுமி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஆத்திபட்டி கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகள் லட்சிதா (10). இவா் முத்துசாமிபுரத்தில் உள்ள பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை பரமசிவம் தனது மனைவி, மகளுடன் தோட்டத்தில் வேலைபாா்த்து கொண்டிருந்தாா். அப்போது, கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த லட்சிதாவை நிலைதடுமாறி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சாத்தூா் தீயணைப்புத் துறையினா் கிணற்றில் இறங்கி சிறுமியின் உடலை மீட்டனா்.
இதுகுறித்து இருக்கன்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்ததில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


