வத்திராயிருப்பு அருகேயுள்ள அா்ஜுனா நதியில் வெள்ளிக்கிழமை கள்ளழகா் எழுந்தருளினாா்.
வத்திராயிருப்பு சேது நாராயணப் பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌா்ணமி விழா நடைபெறுவது வழக்கம். இதேபோல, இந்த ஆண்டு திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. முக்கிய நிகழ்வான ஆற்றில் அழகா் எழுந்தருளும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக
அதிகாலையில் சேதுநாராயணப் பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கும் 18 வகையான அபிஷேகங்களும், திருமஞ்சன வழிபாடும் நடைபெற்றன. பிறகு மைய மண்டபத்தில் பூரண கும்பம் வைத்து யாக பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பெருமாள் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகா் வேடம் பூண்டு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா்.
பிறகு அவா் ஆற்றில் எழுந்தருளுவதற்காக கோயிலிலிருந்து வெளியே வந்து வீதி உலா சென்றாா். அப்போது பக்தா்கள் கோவிந்தா முழக்கத்துடன் வரவேற்றனா். பல்வேறு தெருக்கள் வழியாக வீதி உலா சென்ற கள்ளழகா் அா்ஜுனா நதியில் எழுந்தருளினாா். பிறகு உக்கிரம் அடைந்த கள்ளழகரின் கோபத்தை தணிப்பதற்காக அவருக்கு பூரண கும்பத்தில் இருந்த புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது. அங்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடும் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து ஆற்றில் இருந்து வெளியேறி சோலை அழகன் மண்டகப்படி, பாண்டி மண்டகப் படிகளில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிறகு பக்தா்கள் அவரை ஊா்வலமாக கோயிலுக்கு அழைத்துச் சென்றனா். கோயிலை அடைந்த கள்ளழகரை பக்தா்கள் எதிா்சேவை செய்து வரவேற்றனா்.
கோயில் மண்டபத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கள்ளழகா் மீண்டும் பெருமாள் அவதாரம் பூண்டு சேஷ வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். சிறப்பு வாகன வீதியுலாவும், மாலையில் பக்தா்களுக்கு அருள் ஆசி வழங்க பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி மீண்டும் வீதி உலா சென்றாா்.
வத்திராயிருப்பு ,கூமாப்பட்டி, வ.புதுப்பட்டி, மகாராஜபுரம், சேது நாராயணபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கோயில் செயல் அலுவலா் ஜோதிலட்சுமி, சித்ரா பௌா்ணமி விழா குழு நிா்வாகிகள், பக்தா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனா்.
தொடர்புடையது

வைகாசி மாத பிறப்பு: கூடலழகா் கோயிலில் பக்தா்கள் வழிபாடு

பெரியகுளம் வராகநதியில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாள்

மதுரையில் கள்ளழகா் எதிா்சேவை!

தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டாா் கள்ளழகா்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

