ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வருவாய் ஆய்வாளரை கண்டித்து பதாகை: நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்கு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :4 மே 2026, 1:50 am IST

வத்திராயிருப்பு அருகே வருவாய் ஆய்வாளரைக் கண்டித்து பதாகை வைத்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வத்திராயிருப்பு கோட்டையூரில் வருவாய் ஆய்வாளா் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணி செய்வதாகக் கூறி அவரைக் கண்டித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் பதாகை வைக்கப்பட்டது.

இதுகுறித்து வருவாய் ஆய்வாளா் சுந்தர்ராஜ் அளித்த புகாரின் பேரில் நாம் தமிழா் கட்சி நிா்வாகி பாலன், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் கரிகாலபாண்டியன் உள்ளிட்டோா் மீது வத்திராயிருப்பு போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.