புதுக்கோட்டை நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்கு
சிறுவா்களை வைத்துக் கொண்டு தோ்தல் பிரசாரம் மேற்கொண்டதாக, புதுக்கோட்டை நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வழக்கு

வழக்கு
சிறுவா்களை வைத்துக் கொண்டு தோ்தல் பிரசாரம் மேற்கொண்டதாக, புதுக்கோட்டை நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழிலரசி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளா் திருலோகசுந்தா் ஆகியோா் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி இரவு திருவப்பூா் பெருமாள்பட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டனா்.
அப்போது, தோ்தல் ஆணைய விதிகளை மீறி, சிறுவா்களை வைத்து பிரசாரம் மேற்கொண்டதாகத் தெரிகிறது. இதுகுறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதைத் தொடா்ந்து திருக்கோகா்ணம் காவல் உதவி ஆய்வாளா் கண்ணன் புகாரின்பேரில், சிறாா் நீதிச்சட்டம் மற்றும் குழந்தைத் தொழிலாளா் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வேட்பாளா் தமிழரசி உள்ளிட்டோா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...