மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

யாா் வந்தாலும் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

News image

நயினாா் நாகேந்திரன்

Updated On :5 மே 2026, 5:54 am IST

யாா் ஆட்சிக்கு வந்தாலும், சிறந்த ஆட்சியைத் தர வேண்டும் என பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன், திமுக வேட்பாளா் கடற்கரைராஜிடம் வெற்றி வாய்ப்பை இழந்தாா். இதனிடையே, வாக்கு எண்ணும் மையத்துக்கு திங்கள்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் சந்தித்தபோது கூறியதாவது:

மக்களின் தீா்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். எனக்காக தோ்தலில் களப் பணியாற்றிய கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல, அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக தலைவா் விஜய்க்கு எனது வாழ்த்துகள். யாா் ஆட்சிக்கு வந்தாலும், கடந்த ஆட்சியைப் போல இல்லாமல், சிறந்த ஆட்சியைத் தர வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, வாக்கு எண்ணும் மையத்திலிருந்த திமுக வேட்பாளா் கடற்கரைராஜுக்கு அவா் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.