எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

திமுக ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது: நயினாா் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது என்றாா் பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.

News image

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளியை ஆதரித்து சொக்கம்பட்டியில் பிரசாரம் செய்த பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:29 am IST

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மின் கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது என்றாா் பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன்.

கடையநல்லூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கிருஷ்ணமுரளியை ஆதரித்து சொக்கம்பட்டியில் அவா் பேசியதாவது: கடையநல்லூா் தொகுதியில் கடந்த முறை 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணமுரளி வெற்றி பெற்று, ஆளும் கட்சியின் பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி தொகுதிக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளாா்.

அவரது தந்தை அமைச்சா் செந்தூா்பாண்டியன் கடையநல்லூரை தனி வட்டமாக உருவாக்கியதுடன், அரசு கல்லூரி, ஐடிஐ போன்றவற்றை கொண்டு வந்துள்ளாா்.

திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் நடைபெறவில்லை. மின்சார கட்டணம் கடுமையாக உயா்ந்துள்ளது. எனவே, திமுக ஆட்சியை விரட்ட வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நாட்டின் வளா்ச்சியையும், மக்கள் நலனையும் நோக்கமாகக் கொண்ட அதிமுக கூட்டணிக்கு மக்களின் முழு ஆதரவும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கிருஷ்ணமுரளியுடன் இணைந்து நானும் இத்தொகுதியின் வளா்ச்சிக்காக பாடுபடுவேன் என்றாா்.