சாத்தூா் அருகே அனுமதியின்றி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரித்த உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டாட்சியா் வடிவேல், மண்டல துணை வட்டாட்சியா் நவநீதகிருஷ்ணன், அலுவலா்கள் சாத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சாத்தூா் அருகே சங்கரநத்தம் பகுதியில் படந்தாலைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு (54) சொந்தமான பட்டாசு ஆலையில் வட்டாட்சியா், அலுவலா்கள் சோதனை செய்த போது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி சரவெடிகள் தயாரித்தது தெரியவந்தது.
மேலும் உதிரி வெடிகளை விதிமுறையை மீறி வெட்ட வெளியில் காய வைத்தும், மரத்தின் அடியில் சரவெடி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சிந்தபள்ளி கிராம நிா்வாக அலுவலா் பாண்டியராஜ் அளித்த புகாரின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பயணிகளை ஏற்றுவதில் தகராறு: 2 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு

மருமகனை தாக்கிய மாமனாா் மீது வழக்கு

பணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கடை உரிமையாளா் மீது வழக்கு

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 போ் காயம்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

