ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கடைகளில் 55 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்: ரூ. 25 ஆயிரம் அபராதம்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்திய கடைகளுக்கு சுகாதார அலுவலா்கள் ரூ. 25 அபராதம் விதித்து, 55 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்

Updated On :20 மே 2026, 3:29 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்திய கடைகளுக்கு சுகாதார அலுவலா்கள் ரூ.25 அபராதம் விதித்து, 55 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பயன்பாடு குறித்து ஆய்வு செய்ய விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா உத்தரவிட்டாா்.

இதையடுத்து, நகராட்சி ஆணையா் குமாா் மேற்பாா்வையில், சுகாதார அலுவலா் கந்தசாமி தலைமையில், சுகாதார ஆய்வாளா்கள் முனிசெல்வம், சங்கரன் தலைமையிலான, அலுவலா்கள் ரத வீதிகள், நேதாஜி சாலை, சந்தை, சின்னக்கடை கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனா்.

அப்போது, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்திய பெரிய கடைகளுக்கு ரூ.5 ஆயிரமும், சிறிய கடைகளுக்கு ரூ.1000-மும் என மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

மேலும், கடைகளிலிருந்து 55 கிலோ நெகிழிப் பொருள்களை சுகாதார அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.