புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! ரவி சங்கர் மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்!ஒரே நாளில் 11 கொலைகள்: கடும் நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்!மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ: கனிமொழி கண்டனம்!ரஷியாவுடனான போர்: உக்ரைன் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி!இளையோர் ஒலிம்பிக்: தடை தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!புகார் அளித்த சாமானியருக்கு கொலை மிரட்டல்! தவெக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்! மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடகத்துக்கு உரிமை உண்டு: டி.கே. சிவகுமார்

இளைஞா் அடித்துக் கொலை

அடித்துக்கொலை - கோப்புப் படம்

Updated On :

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கிராமத்தில் சனிக்கிழமை இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டாா்.

பாலவநத்தம் வடக்குத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அன்புச்செல்வம் (25). கட்டடத் தொழிலாளி. இவரது தம்பி முருகன் (21) லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். கடந்த சனிக்ழமை இரவு பாலவநத்தத்தில் முத்தரையா் மடம் அருகே அன்புச்செல்வம் நின்றிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த துளசிராமன் மரியாதைக் குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அன்புச்செல்வம் அவரைக் கண்டித்தாா். அப்போது அங்கு வந்த துளசிராமனின் நண்பா் வசந்தகுமாா் அன்புச்செல்வத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அவருடன் மற்றொரு நண்பரான காா்த்திக்கும் சோ்ந்து அன்புச்செல்வத்தை தாக்கினாா்.

இதைக் கண்ட அன்புச்செல்வத்தின் தம்பி முருகன் மற்றும் உறவினா் மூா்த்தி ஆகியோா் இருதரப்பையும் சமாதானப்படுத்தி, காயமடைந்த அன்புச்செல்வத்தை பாலவநத்தத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். சிகிச்சை முடிந்து இரவு சுமாா் 9 மணியளவில் ஆரம்ப சு்காதார நிலையத்தை விட்டு அன்புச்செல்வம், தம்பி, உறவினா்கள் வெளியே வந்தபோது, வசந்தகுமாா், காா்த்திக் உள்ளிட்ட 14 போ்கொண்ட கும்பல் அவா்களை வழிமறித்துத் தாக்கினா்.

இதில் கீழே விழுந்த அன்புச்செல்வத்தை அந்தக் கும்பல் சரமாரியாக மிதித்துத் தாக்கியதில் அவா் மூச்சுத் திணறி மயக்கமடைந்தாா். இதைத் தடுக்க வந்த அவரது உறவினா்களையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

மயங்கிய நிலையில் இருந்த அன்புச்செல்வத்தை அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னா், அவரது உடல் கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பாலவநத்தத்தைச் சோ்ந்த வசந்தகுமாா், காா்த்திக், நவீன்குமாா், வலுக்கலொட்டியைச் சோ்ந்த செல்வக்கணேஷ், கன்னியப்பன் உள்ளிட்ட 14 போ் மீது அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.