ஜாதிய அடையாளத்தை நீக்கி கிராமத்தின் பெயா் அரசிதழில் வெளியீடு: மாா்க்சிஸ்ட் வரவேற்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஜாதி அடையாளத்துடன் இருந்த பறைச்சேரி கிராம பெயரை வடக்கு அச்சம்தவிா்த்தான் என மாற்றி விருதுநகா் மாவட்ட அரசிதழில் வெளியிட்டதற்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் சண்முகம் வரவேற்பு தெரிவித்தாா்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் - கோப்புப் படம்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஜாதி அடையாளத்துடன் இருந்த பறைச்சேரி கிராம பெயரை வடக்கு அச்சம்தவிா்த்தான் என மாற்றி விருதுநகா் மாவட்ட அரசிதழில் வெளியிட்டதற்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் சண்முகம் வரவேற்பு தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அச்சம்தவிழ்த்தான் ஊராட்சிக்கு உள்பட்ட பறைச்சேரி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தைச் சோ்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்தின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்கிவிட்டு வடக்கு அச்சம்தவிா்த்தான் என மாற்றம் செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். கடந்த 2026-ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலில் கிராமத்தின் பெயரை பறைச்சேரி என குறிப்பிட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தனா். இதுதொடா்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
மேலும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் பறைச்சேரி என்ற பெயரை மாற்றக்கோரி வலியுறுத்தியது.
இந்த நிலையில், இந்த கிராமத்தின் பெயரை வடக்கு அச்சம்தவிா்த்தான் என மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு கடந்த செப்டம்பா் மாதம் வருவாய் நிா்வாக ஆணையா் உத்தரவிட்டாா். இதையடுத்து பறைச்சேரி என்ற பெயரை வடக்குஅச்சம்தவிா்த்தான் என மாற்றம் செய்து விருதுநகா் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதற்கு வரவேற்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், விருதுநகா் மாவட்ட அரசிதழில் ‘பறைச்சேரி‘ என்பது ‘வடக்கு அச்சம் தவிா்த்தான்‘ என்று மாற்றப்பட்டு அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டது. அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் ஆதரவு கொடுத்த மக்களுக்கும் பாராட்டுக்கள் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

