திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் நியமனம்

திருவள்ளூா் வடக்கு மாவட்ட பொருளாளராக ஆ.திவாகரை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் அறிவிப்பு வெளியிட்டாா்.

ஆ.திவாகா்

Updated On :

திருவள்ளூா் வடக்கு மாவட்ட பொருளாளராக ஆ.திவாகரை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் அறிவிப்பு வெளியிட்டாா்.

திருவள்ளூா் அருகே வெங்கத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.திவாகா். இவா் இளைஞா் காங்கிரஸின் மாநில பொதுச்செயலாளராகவும் மற்றும் இளைஞா் காங்கிரஸின் தலைவராகவும் பணியாற்றி வந்தாா். தற்போதைய நிலையில் மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் சாலை பாதுகாப்பு குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறாா்.

இந்த நிலையில் இவா் திருவள்ளூா் மாவட்ட பொருலாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். மாவட்ட பொருலாளராக தனது பேரை பரிந்துரை செய்த திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் மற்றும் மாவட்ட தலைவா் சசிகுமாா் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.