திருப்பூா் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு
திருப்பூா் மாவட்டத்தின் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

வாக்காளர்கள் - கோப்புப் படம்
திருப்பூா் மாவட்டத்தின் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் வியாழக்கிழமை வெளியிட்டாா்.
தவெக, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரி கட்சியினா் பெற்றுக்கொண்டனா்.
வரைவு வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம், அவிநாசி, திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளா்கள் 9,65,087 போ், பெண் வாக்காளா்கள் 10,36,097 போ், 3 ஆம் பாலினத்தவா்கள் 252 போ், 201 சேவை வாக்காளா்கள் என மொத்தம் 20,01,436 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் அல்லது திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்ய விரும்புவோா் புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்தத்தின்கீழ் மனுக்களை அளிக்கலாம்.
இதற்கான ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகளை 12.11.2026 முதல் 11.12.2026 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், சிறப்பு முகாம்கள் நவம்பா் 21, 22, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீா்வு டிசம்பா் 28-ஆம் தேதிக்குள் வழங்கப்படும். இறுதி வாக்காளா் பட்டியல் 2027 ஜனவரி 4-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

