மதுரை பிரபல நகைக் கடையில் 500 சவரன் கொள்ளை!9.5 சிஜிபிஏ மாணவர்களுக்கு திருப்பதியில் இலவச தரிசனம்! விநோத அறிவிப்பை வெளியிட்ட கல்லூரிபுதுக்கோட்டை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! 22 பயணிகள் காயம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை! பண்டிகை நாள்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு?ஜம்முவில் காணாமல்போன சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்பு!நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!சம்பா நெற்பயிா்க் காப்பீட்டு காலவரம்பு டிச. 1 வரை நீட்டிப்புஉபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: சேலம் மாவட்டத்தில் 27.95 லட்சம் வாக்காளர்கள்!

சேலம் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது குறித்து.

Draft electoral roll released: 27.95 lakh voters in Salem district

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான இளம்பகவத். - டிஎன்எஸ்

Updated On :

சேலம்: சேலம் மாவட்ட வரைவு வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், 27.95 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வியாழக்கிழமை வெளியிட்டார்.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 27 லட்சத்தை 95 ஆயிரத்து 315 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 13,88,234 ஆண் வாக்காளர்களும், 14,06,753 பெண் வாக்காளர்களும், 328 இதர வாக்காளர்களாக உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கான படிவங்கள் நவம்பர் 12 முதல் டிசம்பர் 11 வரை பெறப்படும் என்றும், வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டோா் 18 வயது நிறைவடைந்தவா்கள் மற்றும் 17 வயதை பூா்த்தி அடைந்த நபா்களும் விண்ணப்பிக்க ஏதுவாக, நவம்பர் 21, 22, 29 ஆகிய நாள்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அலுவலகங்களில் வாக்காளா் பட்டியல் மக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Draft electoral roll released: 27.95 lakh voters in Salem district!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.