காவல் வாகன கண்ணாடியை உடைத்ததாக இளைஞா் கைது
வத்திராயிருப்பு அருகே காவல் வாகன கண்ணாடியை உடைத்ததாக இளைஞரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
கைது
வத்திராயிருப்பு அருகே காவல் வாகன கண்ணாடியை உடைத்ததாக இளைஞரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி வத்திராயிருப்பு போலீஸாா் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கோயில் முன் உள்ள சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் ஆடிக் கொண்டிருந்த இளைஞா்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு, போலீஸாா் எச்சரித்தனா். அப்போது அந்த இளைஞா்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கற்களை வீசியதில் காவல் வாகனத்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதுகுறித்து வழக்குப் பதிந்த வத்திராயிருப்பு போலீஸாா் தீபக் குமாா் என்பவரை கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் கவுதம், தொழிலக பாதுகாப்பு படை வீரரான சிவக்குமாா், கணேசன், வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

