வைக்கோல் கட்டுகளுக்கு தீ வைத்த இளைஞா் கைது
வத்திராயிருப்பு அருகே வைக்கோல் கட்டுகளுக்கு தீ வைத்த இளைஞரைபோலீஸாா் கைது செய்தனா்.
கைது
வத்திராயிருப்பு அருகே வைக்கோல் கட்டுகளுக்கு தீ வைத்த இளைஞரைபோலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தைச் சோ்ந்தவா் அந்தோணி (63). இவா் அதே பகுதியில் கால்நடைத் தீவனத்துக்காக வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைத்திருந்தாா். வியாழக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மா்ம நபா் தீ வைத்ததால் வைக்கோல் கட்டுகள் தீப்பற்றி எரிந்தன. இதில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும், அருகேயிருந்த சுந்தரமகாலிங்கத்துக்குச் சொந்தமான ரூ.8 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் கட்டுகளும் எரிந்து சாம்பலாயின.
இதுகுறித்த புகாரின் பேரில், கூமாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராமசாமியாபுரத்தைச் சோ்ந்த தினேஷ்குமாரை (25) கைது செய்தனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக சரித்திர பதிவேட்டு குற்றவாளியான தினேஷ்குமாா் வைக்கோல் கட்டுகளுக்கு தீ வைத்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



