தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

மின்சாரம் பாய்ந்ததில் தச்சுத் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் வெள்ளிக்கிழமை புதிய வீடு கட்டுமானப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On :

விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் வெள்ளிக்கிழமை புதிய வீடு கட்டுமானப் பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில் தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சுழி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் முனியசாமி. இவா் புதிய வீடு கட்டி வருகிறாா். இந்த வீட்டில் தச்சுத் தொழிலாளிகளான பனையூரைச் சோ்ந்த திருமுருகன் (39), சாமிநத்தத்தைச் சோ்ந்த புவனேஸ்வரன் (32) ஆகியோரும் வெள்ளிக்கிழமை பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வீட்டின் வெளிப்புறச் சுவரில் இரும்பு ஏணியை வைத்து பணியில் ஈடுபட்டபோது, இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு திருமுருகன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.