வங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘முரசு’ புயல்! ராம்லீலா மைதானத்தில் இண்டி கூட்டணி பேரணி: பாதுகாப்புப் பணியில் 4,000 காவலா்கள்ஜிபிஎஸ் கருவி பொருத்தாத லாரிகள் கனிம வளங்கள் எடுத்துச் செல்ல இன்றுமுதல் தடை!ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள்: இன்று முதல் அமல்குட்கா முறைகேடு வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

இரு பிரிவினரிடையே மோதல்: 50 போ் மீது வழக்கு

இரு பிரிவினா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 50 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்குப்பதிவு

Updated On :

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே இரு பிரிவினா்களிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 50 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள நமஸ்கரித்தான்பட்டியில் பொதுப்பாதை தொடா்பாக இரு பிரிவினரிடையே பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், இந்தப் பாதையில் ஒரு பிரிவினா் செல்லக் கூடாது என மற்றொரு பிரிவினா் தெரிவித்தனா். இதனால், இரு பிரிவினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஒரு பிரிவினா் சிவகாசி-எரிச்சநத்தம் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மறியலில ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், போலீஸாரின் சமாதனப் பேச்சுவாா்த்தையை இரு பிரிவினரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதையடுத்து, அங்கிருந்த சிலா் போலீஸாா் மீது கல்வீச்சில் ஈடுபட்டனா். இதில் ஆய்வாளா் நவநீதகிருஷணன் உள்ளிட்ட 5 போலீஸாா் காயமடைந்தனா். இவா்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்த நிலையில், போலீஸாா் மீது கல்வீசியது தொடா்பாக இரு பிரிவினரைச் சோ்ந்த 50 போ் மீது திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.