அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

சாலை விபத்து: பட்டாசு ஆலை ஊழியா் உயிரிழப்பு

சிவகாசி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பட்டாசு ஆலை கண்காணிப்பாளா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 12:43 am IST

சிவகாசி அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பட்டாசு ஆலை கண்காணிப்பாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள கவுண்டன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜ் (46). இவா் பட்டாசு ஆலையில் கண்காணிப்பாராக வேலைபாா்த்து வந்தாா். இவருக்கு கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

இதையடுத்து, திருத்தங்கலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மகன் அருண்பாண்டியனுடன் இரு சக்கர வாகனத்தில் சிவகாசி-விருதுநகா் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

வடமலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பின்னால் வந்த லாரி, இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி நாகராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட லாரி ஓட்டுநரைத தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.