இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

பெண்ணிடம் இணைய வழியில் ரூ.3.73 லட்சம் மோசடி

சிவகாசி அருகே பெண்ணிடம் இணையவழியில் ரூ.3.73 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மோசடி - பிரதிப்படம்

Published On :

சிவகாசி அருகே பெண்ணிடம் இணையவழியில் ரூ.3.73 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செங்கமலநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த சேகா் மகள் பூஜா (33). இவரது கைப்பேசிக்கு அண்மையில் தனியாா் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 5 சதவீதம் கூடுதல் லாபம் கிடைக்கும் என குறுஞ்செய்தி வந்தது.

இதையடுத்து பூஜா அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் ரூ. 20 ஆயிரம் செலுத்தினாா். பின்னா், சில நாள்கள் கழித்து உங்களது முதலீட்டுக்கு, லாபத் தொகை கூடுதலாக கிடைத்ததாகவும், மேலும் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து, அவா் படிப்படியாக ரூ.3.73 லட்சத்தை அவா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தாா். பின்னா், பூஜாவின் கைப்பேசி எண்ணுக்கு அந்த நிறுவனம் தொடா்புகளை நிறுத்தி விட்டது. இதுகுறித்து அவா் விருதுநகா் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.