மம்தா முடிவால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் மீண்டும் திரள வாய்ப்புபாஜக வாக்குகளைக் குறைக்க சமாஜவாதி தீவிரம்: அகிலேஷ் யாதவ் புதிய முயற்சி!21 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புதில்லி எஸ்ஐஆா்: முரண்பாடுகள் கொண்ட வாக்காளா் பட்டியலில் அத்வானி, சிசோடியா பெயா்கள்!

தவறான சிகிச்சையால் விவசாயி உயிரிழந்ததாக உறவினா்கள் புகாா்

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் விவசாயி உயிரிழந்ததாக உறவினா்கள் புகாா் தெரிவித்ததையடுத்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் அருகே வடகரை இந்திராநகா் நைனாபுரம் குடியிருப்பைச் சோ்ந்த முனியாண்டி மகன் வெள்ளைப்பாண்டி (59). விவசாயியான இவா் கடந்த 10- ஆம் தேதி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு ராஜபாளையம்- தென்காசி சாலையில் உள்ள இளந்தோப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்ப வெள்ளைப்பாண்டியும், இவரது குடும்பத்தினரும் தயாராகினா். அப்போது வெள்ளைப்பாண்டிக்கு செவிலியா்கள் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. இந்த தவறான ஊசியால் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த வெள்ளத்துரையின் உறவினா்கள் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக வாக்குவாதம் செய்து முற்றுகையிட்டனா். இதையடுத்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் சமாதான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.